PBKS vs RCB Qualifier 1 IPL 2025: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்று 1ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) - பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோதுகின்றன. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் மொஹாலியில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ஐந்து முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி, அதே உத்வேகத்துடன் களமிறங்குகிறது. அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு ஓவர் மீதமிருக்கையில் 230 ரன்கள் எடுத்து வீழ்த்திய ஆர்சிபி அணி, அதே வேகத்தை பஞ்சாப் அணிக்கு எதிராகவும் தொடர விரும்புகிறது.
ப்ரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹல் வதேரா, சஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஸ்மதுல்லா ஒமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன்.
பஞ்சாப் கிங்ஸ் இம்பேக்ட் சப்: விஜயகுமார் வைஷாக், பிரவீன் துபே, சூர்யாம்ஷ் ஷெட்கே, முஷீர் கான், சேவியர் பார்ட்லெட்.
விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யஷ் தயால், ஜோஷ் ஹேசல்வுட், சுயாஷ் சர்மா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பேக்ட் சப்: மயங்க் அகர்வால், ரசிக் சலாம், மனோஜ் பாண்டகே, டிம் சீஃபெர்ட், சுப்னில் சிங்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் 35 முறை மோதியுள்ளன. இதில் 18 முறை பஞ்சாப் அணியும், 17 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்திய ஐந்து போட்டிகளில் நான்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு அணி பஞ்சாப் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 241 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி பெங்களூரு அணிக்கு எதிராக அதிகபட்சமாக 232 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு அணி குறைந்தபட்சமாக 84 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணி குறைந்தபட்சமாக 88 ரன்களும் எடுத்துள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.