
முன்னணி அணிகளுக்கு எதிராக களம் இறங்கும்போது தங்களை கத்துக்குட்டி அணி என இந்திய வீராங்கனைகள் நினைத்து விடுகின்றனர் என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மரின் ஜியோர்டு தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக மரின் ஜியோர்டு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றார். இவருடைய பயிற்சிக்கு பிறகு, இந்திய மகளிரணி பங்கேற்ற முதல் போட்டியான உலக ஹாக்கி லீக் இரண்டாவது சுற்றில் இந்திய அணி வாகை சூடியது. மேலும், உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் விளையாடவும் தகுதிப் பெற்றது என்பது குறிப்பிடத்தகக்து.
இந்நிலையில் அவர் கூறியிருப்பது:
“இந்திய வீராங்கனைகளிடம் போதுமான தன்னம்பிக்கை இல்லாததை தெரிந்து கொண்டேன். அதன் காரணமாக சில ஆட்டங்களில் களம் இறங்குவதற்கு முன்னதாகவே அதில் தோற்றுவிடுகிறார்கள்.
முன்னணி அணிகளுக்கு எதிராக களம் இறங்கும்போது தங்களை கத்துக்குட்டி அணி என இந்திய வீராங்கனைகள் நினைத்து விடுகின்றனர். எனவேதான் அவர்கள் மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் தங்களை பற்றி சிந்திக்க வைக்கிறேன். மற்றவர்களைப் பற்றி சிந்தித்தால் அது நம்முடைய கவனத்தை சிதைக்கும்.
இந்திய வீராங்கனைகள் தங்களுடைய இலக்கின் மீதும், அதை சிறந்த முறையில் எட்டுவதிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய ஹாக்கி வீராங்கனைகள் போதுமான தன்னம்பிக்கை இன்றி காணப்படுகிறார்கள். அதை சரி செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.