நீச்சலில் உலக சாதனை நிகழ்த்திய தேனி மாணவன்; 3-ஆம் வகுப்பு தான் படிக்கிறார்…

First Published Apr 17, 2017, 10:04 AM IST
Highlights
Theni student in a world record by swimming 3-in-class just reads


தேனி மாவட்டத்தில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர் நீச்சலில் உலக சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார். இவர் 81 நிமிடங்களில் 4 கி.மீ நீந்தி சாதனை புரிந்துள்ளார்.

தேனியைச் சேர்ந்த வணிகர் ரவிக்குமார் மகன் ஜெய்ஜஸ்வந்த் (8). இவர், தேனியில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.

தேனி மாவட்ட நீச்சல் குளத்தில் கடந்த ஓராண்டாக நீச்சல் பயிற்சி பெற்று வந்தார் ஜெய்ஜஸ்வந்த்.

இந்த நிலையில், அவரது நீச்சல் திறமையை அடையாளம் கண்ட, "அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு பவுண்டேசன்' அமைப்பு, மினி மாரத்தான் நீச்சல் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.

அதன்படி, மாவட்ட நீச்சல் குளத்தில் ஜெய்ஜஸ்வந்த் 81 நிமிடங்கள் இடைவிடாமல் நீந்தி 4 கி.மீ. தூரத்தைக் கடந்து உலக சாதனை நிகழ்த்தினார்.

பவுண்டேசன் சார்பில், அதன் நடுவர் அருண் தாமஸ் பங்கேற்று குழந்தைகளுக்கான மினி மாரத்தான் நீச்சலில் உலக சாதனை நிகழ்த்திய ஜெய்ஜஸ்வந்திற்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

உலக சாதனை நிகழ்த்திய தேனி ஜெய்ஜஸ்வந்திற்கு நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்து கௌரவித்தனர்.

tags
click me!