மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்...

First Published Mar 28, 2018, 11:00 AM IST
Highlights
West Indies team padding must be improved ...


மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங் வரிசையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் அடுத்தாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றன. 

பத்து அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், எஞ்சியுள்ள 2 அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், ஆப்கானிஸ்தான் மற்றும் மே.இ.தீவுகள் அணிகள் தகுதி பெற்றன. 

இரண்டு முறை (1975, 1979) உலகக் கோப்பையை வென்ற மே.இ.தீவுகள் அணி இந்த முறை போட்டியில் பங்குபெறவே கடுமையாக போராடியது. 

பாகிஸ்தான் பிரீமியர் லீக் (பிபிஎல்) போட்டியின் இறுதி ஆட்டம் அந்நாட்டின் கராச்சி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கிரிக்கெட் உலகில் ஆகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகப் புகழப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ் அந்தப் போட்டியைக் காண வந்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் வென்று போட்டிக்குள் எங்கள் அணி நுழைந்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 

அதேநேரம், பேட்டிங் வரிசையை அந்த அணி இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகள் பங்கேற்கும் என்பதால் நமது அணியை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 
 

tags
click me!