இந்திய பவுலிங்கை வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!! வெளியே அனுப்பிய வேகப்பந்து வீச்சாளர்

Published : Oct 21, 2018, 02:58 PM IST
இந்திய பவுலிங்கை வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!! வெளியே அனுப்பிய வேகப்பந்து வீச்சாளர்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிவருகிறது.   

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிவருகிறது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி குவாஹத்தியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக கிரன் பவல் மற்றும் சந்தர்பால் ஹேம்ராஜ் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார் பவல். அதன்பிறகு மீண்டும் ஷமி வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ஹேம்ராஜ்.

இதையடுத்து 5வது ஓவரை வீசிய ஷமி, ஹேம்ராஜின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு பவலுடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். பவல் தொடர்ந்து அதிரடியாக ஆடி பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசினார். 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 51 ரன்கள் குவித்த பவல், இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதன்பிறகு களத்திற்கு வந்த அந்த அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் இரண்டவது பந்திலேயே சாஹலின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து ஹோப்பும் ஹெட்மயரும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Tallest Cricketers: 6 அடிக்கு மேல.. இந்தியாவின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்.. லிஸ்ட் பார்த்தா அசந்துடுவீங்க!
IND vs SL: கபில் தேவ்வுடன் எலைட் லிஸ்ட்டில் இணைந்த 'சர்' ஜடேஜா! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!