இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் அறிமுகம்!! கலீல் அகமதுவிற்கு வாய்ப்பு.. தூக்கி அடிக்கப்பட்ட ரிஸ்ட் ஸ்பின்னர்

Published : Oct 21, 2018, 01:28 PM IST
இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் அறிமுகம்!! கலீல் அகமதுவிற்கு வாய்ப்பு.. தூக்கி அடிக்கப்பட்ட ரிஸ்ட் ஸ்பின்னர்

சுருக்கம்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் அறிமுகமாகிறார்.   

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் அறிமுகமாகிறார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, குவாஹத்தியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்த இளம் வீரர் ரிஷப் பண்ட், இந்திய ஒருநாள் அணியில் இந்த போட்டியில் அறிமுகமாகிறார். 

அதேபோல் ஆசிய கோப்பையில் அறிமுகமான இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவிற்கு அணியில் ஆட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், ஷமி, கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஜடேஜா மற்றும் சாஹல் ஆகிய இரண்டு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை. 
 
PREV
click me!

Recommended Stories

IPL 2026: ரூ.14 கோடி போச்சா..? CSKவின் காஸ்ட்லி பிளேயருக்கு காயம்.. கலக்கத்தில் ரசிகர்கள்
பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி