தோனியை பத்தி ஏதாவது பேசுனீங்க.. நடக்குறதே வெற!! கோலி காட்டம்

By karthikeyan VFirst Published Oct 21, 2018, 11:49 AM IST
Highlights

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய தோனி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தமாக ஆடி சொதப்பினார். ஆசிய கோப்பையிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் தோனி மீதான விமர்சனங்கள் வலுத்துள்ளன.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது. 

இந்த தொடரில் இந்திய அணியில் நிலவும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காணும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால், மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்த தொடர் முக்கியமானதாக அமையும்.

முதல் மூன்று இடங்களில் ரோஹித், தவான், கோலி உறுதி. இவர்கள் நல்ல மூவருமே நல்ல ஃபார்மில் உள்ளனர். ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் முறையே தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் ஆடுவர். எனவே 4 மற்றும் 5வது இடங்கள் மட்டுமே இந்திய அணிக்கு பிரச்னையாக உள்ளது. 

அதற்கு இந்த தொடர் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் 5வது இடத்திலும், ஆசிய கோப்பையில் நன்றாக ஆடிய ராயுடு 4வது இடத்திலும் களமிறக்கப்பட உள்ளனர். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இவர்களே மிடில் ஆர்டர்களாக தொடர்வர். 

அதேநேரத்தில் 6வது வரிசையில் இறங்கும் தோனி ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார். கடந்த சில மாதங்களாகவே ஃபார்மில் இல்லை. ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினார். எனினும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தமாக ஆடி சொதப்பினார் தோனி. ஆசிய கோப்பையிலும் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே தோனி மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் ஃபார்மில்லாததை காரணம் காட்டி அவ்வளவு எளிதாக தோனியை ஓரங்கட்டிவிட முடியாது. அவரது அனுபவமும், விக்கெட் கீப்பராக அவரது சேவையும் இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை. 

அவர் விக்கெட் கீப்பராக இருக்கட்டும்; ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவே இருந்தாலும் பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே இந்திய அணியின் நிலைப்பாடாக உள்ளது. 

இன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலியிடம் தோனியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி, சிலருக்கு பிரச்னைகளை உருவாக்க மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரிவதில்லை. விமர்சனம் செய்வது எளிது, அவர் அனுபவமான வீரர். எந்த நிலையில் களமிறக்கிவிட்டாலும் சூழலை உணர்ந்து ஆடக்கூடியவர் என்று சற்று காட்டமாக பதிலளித்தார். 
 

click me!