நாங்கள் வீரர்களுக்கு எதிராக விளையாடுவதில்லை. ஒரு நாட்டுக்கு எதிராகவே விளையாடுகிறோம் - ரவி சாஸ்திரி...

First Published Mar 2, 2018, 11:51 AM IST
Highlights
We do not play against players Playing against a country - Ravi Shastri


நாங்கள் வீரர்களுக்கு எதிராக விளையாடுவதில்லை. ஒரு நாட்டுக்கு எதிராகவே விளையாடுகிறோம் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி மீதான விமர்சனங்கள் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று தெரிவித்தார்.

அதில், "இரண்டு டெஸ்டுகளில் தோற்றபிறகும் எங்களால் மூன்றாவது டெஸ்டை வெல்ல முடியும் என்று நம்பினோம். முதலிரண்டு டெஸ்டுகளையும் கூட நாங்கள் வென்றிருக்க முடியும். இதை சிலரே அறிந்திருந்தார்கள்.  

சில சமயங்களில் நம் நாட்டில், இந்திய அணி தோற்கும்போது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். முதலிரண்டு டெஸ்டுகளிலும் இரண்டு செஸன்களில் மட்டுமே நாங்கள் பின்தங்கியிருந்தோம். அதனால்தான் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

இக்குறைகளை அறிந்துகொண்டபிறகு அடுத்த டெஸ்டை டிரா செய்யக்கூடாது, ஜெயிக்கவேண்டும் என்று எண்ணினோம். ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் எத்தனை அணிகள் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்திருக்கும்?

நாங்கள் நன்றாக விளையாடும்போது எதிரணி பலவீனமாக உள்ளதாக விமரிசகர்கள் கூறுகிறார்கள். இதுதான் நம் விமரிசகர்களிடம் உள்ள பெரிய பிரச்னை.

இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை ஜெயித்தால் அந்த அணிகள் பலமாக இல்லை என்கிறார்கள். ஆனால், இந்திய அணி தோற்கும்போது நம் அணி பலவீனமாக இருந்தது என்று கூறுவதில்லை.

நாங்கள் வீரர்களுக்கு எதிராக விளையாடுவதில்லை. ஒரு நாட்டுக்கு எதிராகவே விளையாடுகிறோம். நாங்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும்போது அந்த அணியில் யார் யார் உள்ளார்கள் என்பது பற்றி கவலையில்லை.

எதிர்பார்ப்புகளுக்கு வீரர்கள் எவ்வாறு ஈடுகொடுக்கிறார்கள் என்றால், எதையும் படிக்க வேண்டாம், எதையும் கேட்க வேண்டாம், தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டால், மற்றவை தானாக பின்தொடரும் என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

வெற்றியும் தோல்வியும் நம் கையில் கிடையாது, ஆனால் அதற்கான முயற்சிகள் நம்மிடம்தான் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

 

tags
click me!