இந்திய அணி சிறப்பாக செயல்பட சிறந்த அணியையே தேர்வு செய்கிறோம் - எம்.எஸ்.கே.பிரசாத்

First Published Aug 15, 2017, 10:24 AM IST
Highlights
We choose the best team to perform the best team of India - MSK Prasad


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து யுவராஜ் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட சிறந்த அணியையே தேர்வு செய்கிறோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அதில் மூத்த வீரரான யுவராஜ் சிங் நீக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து மூத்த வீரரான யுவராஜ் சிங்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணப்படுகிறது. இதுதொடர்பாக ஊடகங்கள், வலைதளங்களில் கருத்துகள் பரவிவருகின்றன.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது:

“யுவராஜ் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. மூத்த வீரர்கள் யாருக்கும் இந்திய அணியின் கதவு மூடப்படவில்லை. அனைவருக்கும் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடும் உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் அணி தேர்வு என்று வரும்போது சிறந்த அணியையே தேர்வு செய்ய முயற்சிக்கிறோம்.

தேர்வுக்குழு கூட்டத்தின்போது தோனியைப் பற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு வீரரைப் பற்றியும் விவாதிக்கிறோம். தோனியின் எதிர்காலத்தைப் பற்றி கணிப்பது கடினம்.

இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். தோனி சிறப்பாக செயல்படுகிறபோது அவரை ஏன் நீக்க வேண்டும்? அவர் சிறப்பாக செயல்படாதபோது, அவருக்கு மாற்றாக யாரை களமிறக்குவது என்பது குறித்து நாங்கள் சிந்திப்போம்” என்று கூறினார்.

tags
click me!