ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! சேப்பாக்கம் மைதானத்திற்குள் எதையும் கொண்டு செல்ல முடியாது..!

First Published Apr 9, 2018, 5:26 PM IST
Highlights
WE cant keep with us while going to cheppakkam stadiyum


நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட்  போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது  

மைதானத்திற்குள் எந்த விதமான பொருட்களையும்கொண்டுவரக் கூடாது  என கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது

அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ்அணி மோத உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்,சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாட உள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்

இந்நிலையில், மைதானத்திற்குள் செல்ல விதித்த கடுமையான கட்டுப்பாடுகள்  

ரசிகர்கள் மைதானத்திற்குள் பேனர்கள் மற்றும் கொடி எடுத்து செல்ல கூடாது

இசை கருவிகள், வீடியோ காமெராக்கள்,குடிநீர் பாட்டில்கள், தீப்பெட்டி, செல்போன், பைனாகுலர், எலக்ரானிக் பொருட்கள், இசை கருவிகள்,சிகரெட் உள்ளிட்ட பல பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு தமிழக மக்களிடேயே பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கும் சமயத்தில் இது போன்ற கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது 

இதே போன்று,மைதானத்திற்கு எதையாவது வீசினால் அவர்களை  அடையாளம் கண்டு உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது 

இதற்கு முன்னதாக,காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடும் தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால், சில கட்சிகள் முதல் இசை அமைப்பாளர்  ஜேம்ஸ் வசந்தன் வரை, கிரிக்கெட்  மைதானம் குறித்து  தங்களுடைய   கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

பொதுவாகவே கிரிக்கெட் மைதானத்திற்கு செல்வதை புறக்கணிக்க  வேண்டும் என பெரும்பாலோனோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில்,ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று, அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்லாமல்  இருப்பார்களா என்பது சந்தேகமே...இந்நிலையில் தான் இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சேப்பாக்கம் மைதானத்தின் நிர்வாகம் அறிவுறுத்தல்

click me!