வார்னர் எடுக்கும் புதிய அவதாரம்!! ரசிகர்கள் அதிர்ச்சி

First Published Jun 10, 2018, 5:46 PM IST
Highlights
warner to join commentary team


பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர் வார்னர், புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட வார்னர் மற்றும் 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட பான்கிராஃப்ட் ஆகிய இருவரும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியது. 

கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடியது. அப்போது கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. 

அதனால், வார்னரும் ஸ்மித்தும் ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. ஆனால் கனடாவில் நடந்துவரும் போட்டிகளில் ஆட ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்தது. அதன்பிறகு வார்னருக்கும் உள்ளூர் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்தது.

இதற்கிடையே ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளுக்கு வார்னர் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். சேனல் 9 தொலைக்காட்சியில் வர்ணனையாளராக உள்ளார்.  

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் போது, இனிமேல் தான் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என கண்ணீர் விட்டு அழுதார். எனவே ஆஸ்திரேலிய அணிக்காக ஆடமுடியாது என்பதால், வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
 

click me!