
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் வோஜஸின் தலையில் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டார்.
ஷெப்பீல்டு ஷீல்டு கிரிக்கெட் போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மானியா அணிகள் இடையிலான ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய வோஜஸ் பேட் செய்தார்.
அப்போது டாஸ்மானியா வேகப்பந்து வீச்சாளர் கேம் ஸ்டீவன்சன் வீசிய அதிவேக பவுன்சர் ஒன்று, வோஜஸ் தலையின் பின்புறத்தில் தாக்கியது. இதில் நிலைகுலைந்துபோன வோஜஸ் அப்படியே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து சகவீரர்கள் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர். பின்னர் மைதானத்தில் சிகிச்சை பெற்ற வோஜஸ், அதன்பிறகு விளையாடவில்லை.
இந்த ஆண்டில் வோஜஸுக்கு தலையில் அடிபடுவது இது 2-ஆவது முறையாகும்.
முன்னதாக கடந்த மே மாதம் நடைபெற்ற கவுன்டி போட்டியில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடியபோது பீல்டர் எறிந்த பந்து வோஜஸின் தலையில் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஷெப்பீல்டு போட்டியில் இருந்து வோஜஸ் விலகியுள்ளார். அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கு அவர் உடற்தகுதியுடன் இருப்பாரா என்பது தெரியவில்லை.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.