
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சச்சின் என வர்ணிக்கப்படும் விராத் கோஹ்லி இன்று தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்திய அணி பல்வேறு இக்கட்டான போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக திகழும் கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 3,554 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 7,570 ரன்களும், டி20 போட்டிகளில் 1,657 ரன்களும் எடுத்துள்ளார்.
சச்சினின் வரலாற்றுச் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்புள்ள ஒரே கிரிக்கெட் வீரரராக கோஹ்லி திகழ்கிறாா். இந்நிலையில் இன்று 28வது பிறந்த நாளைக் கொண்டாடும் கோஹ்லிக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், சேவாக், ஹர்பஜன் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் கோஹ்லி, எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாகவும் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.