முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி…

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 12:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி…

சுருக்கம்

தோகா,

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டியில், இந்தியாவை சேர்ந்த அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பெங்களூரு எப்.சி. (இந்தியா), ஈராக் அல் குவா அல் ஜாவியா கிளப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த அணி ஒன்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எப்.சி. அணி, அல் குவா அல் ஜாவியா (ஈராக் விமானப்படை) கிளப் அணியை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி 11 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி, 2 டிராவுடன் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

ஈராக் கிளப் அணி 8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?