மருத்துவ ஆலோசனைப் பெற இலண்டன் செல்கிறார் ரோஹித் சர்மா…

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 12:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
மருத்துவ ஆலோசனைப் பெற இலண்டன் செல்கிறார் ரோஹித் சர்மா…

சுருக்கம்

தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா அடுத்த வாரம் இலண்டன் செல்கிறார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்தும் அவர் விலக நேரிடும் என தெரிகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெறுவதற்காக அடுத்த வாரம் லண்டன் செல்கிறார் ரோஹித் சர்மா. அவர், அறுவை சிகிச்சை செய்துகொண்டால் 10 முதல் 12 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும்.

ரோஹித் சர்மா முழு உடற்தகுதியை பெற்று இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிசிசிஐ மருத்துவர்கள் குழு செய்யும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது ரோஹித் சர்மாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வரும் 9-ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகினார். அவருடைய காயம் குறித்து இலண்டன் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா கூறியதாவது: இன்னும் எவ்வளவு நாள்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்பது தெரியவில்லை. பிசிசிஐ மருத்துவர் குழு, இலண்டன் மருத்துவர்களுடன் தொடர்பில் உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் இலண்டன் மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காயத்துக்கு அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா? அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எவ்வளவு நாள்கள் ஓய்வில் இருக்க நேரிடும் என்பது தொடர்பாக இலண்டன் மருத்துவர்கள் தெரிவிப்பார்கள்.

தற்போது வரையில் அறுவை சிகிச்சை தேவைப்படுமா, இல்லையா என்பது குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை. அறுவை சிகிச்சை செய்துகொண்டால் 3 முதல் மூன்றரை மாதங்கள் வரை விளையாட முடியாது. மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்' என்றார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?