ஆஸ்திரேலியாவுல கால் வச்சுதுமே ஆட்டத்தை ஆரம்பித்த கோலி, ரிஷப்!! வீடியோ

By karthikeyan VFirst Published Nov 18, 2018, 11:51 AM IST
Highlights

முன்னெப்போதையும் விட இந்திய அணி மிகச்சிறந்த வலுவான வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றிருக்கும் அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் இந்திய அணி தான் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. அதற்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தாலும் தொடர்ந்து வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்துவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. 

மேலும் அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க உள்ளதால் ஒருநாள் தொடரும் மிக முக்கியமானது. அதனால் ஒருநாள் தொடரையும் வெல்லும் தீவிரத்தில் இந்திய அணி உள்ளது. முன்னெப்போதையும் விட இந்திய அணி மிகச்சிறந்த வலுவான வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றிருக்கும் அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் இந்திய அணி தான் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவற்றை எல்லாம் கடந்து ஸ்லெட்ஜிங் எந்தளவிற்கு இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் பொதுவாகவே எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதில் ஆஸ்திரேலிய வீரர்கள் கைதேர்ந்தவர்கள். அதனால் அதுகுறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதுகுறித்து இங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, நாங்களாக ஸ்லெட்ஜிங்கை முன்னெடுக்க மாட்டோம். ஆனால் ஆஸ்திரேலிய அணி அதை செய்தால் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என்று அதிரடியாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். 

பொதுவாக ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்தும் கோலி, இந்திய அணியின் ஃபிட்டான வீரர் என்றும் உலகளவில் ஃபிட்டான வீரர்களில் ஒருவர் என்றும் பெயர் பெற்றவர். இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்றதுமே ஒர்க் அவுட்டை ஆரம்பித்துவிட்டார் விராட் கோலி. இளம் வீரர் ரிஷப் பண்ட்டுடன் டிரெட்மில்லில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை கோலி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

There's no ideal way to put in hard work. Everyday is an opportunity. Stay fit stay healthy! ✌️💪🏃 pic.twitter.com/ytNV9bTrLg

— Virat Kohli (@imVkohli)
click me!