டான் பிராட்மேனுக்கு அடுத்து நம்ம விராட் கோலி தான்!!

Published : Aug 21, 2018, 11:02 AM ISTUpdated : Sep 09, 2018, 07:18 PM IST
டான் பிராட்மேனுக்கு அடுத்து நம்ம விராட் கோலி தான்!!

சுருக்கம்

அரைசதங்களை சதங்களாக மாற்றுவதில் கிரிக்கெட் உலகின் கடவுளாக கருதப்படும் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி தான் உள்ளார். 

அரைசதங்களை சதங்களாக மாற்றுவதில் கிரிக்கெட் உலகின் கடவுளாக கருதப்படும் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி தான் உள்ளார். 

கிரிக்கெட் உலகின் கடவுளாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் கருதப்படுகிறார். பிராட்மேன் ஆடிய காலக்கட்டத்தில் குறைந்தளவிலான போட்டிகள் தான் ஆடப்பட்டன. ஆனால் அந்த போட்டிகளிலேயே அவர் செய்த சாதனைகள் ஏராளம். 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6,996 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சராசரி 99.94. அதாவது 100க்கு 0.06 குறைவு. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 334. 

234 முதல்தர போட்டிகளில் ஆடி 28,067 ரன்களை குவித்துள்ளார் பிராட்மேன். டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களையும் முதல்தர போட்டிகளில் 117 சதங்களையும் அடித்துள்ளார். 1928 முதல் 1948 வரையிலான காலக்கட்டத்தில் 52 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் ஆடியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் பிராட்மேனுக்கு பந்துவீசவே பவுலர்கள் பயந்து நடுங்கினர். அதை பவுலர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. 

பிராட்மேன் சதங்களை தொடர்ந்து குவித்து வந்தார். 50 ரன்களை கடந்துவிட்டால் அதை பெரும்பாலும் சதமாக மாற்றிவிடுவார் பிராட்மேன். பிராட்மேனுடன் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒப்பிடப்பட்டார். பிராட்மேனுக்கு அடுத்து சச்சின் தான் என்ற நிலைதான் இதுவரை உள்ளது. 

ஆனால் ஒரு விஷயத்தில் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தை விராட் கோலி பிடித்துவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதங்களை சதங்களாக மாற்றுவதில் பிராட்மேனுக்கு அடுத்து கன்வேர்சன் ரேட் அதிகமாக பெற்றிருப்பது கோலி தான். 

42 முறை அரைசதங்களை கடந்ததில் 29 முறை சதமடித்து, 69.05 கன்வர்சன் ரேட்டை பெற்றுள்ளார் பிராட்மேன். அதற்கு அடுத்து அரைசதங்களை சதங்களாக மாற்றுவதில் 56.09 கன்வர்சன் ரேட்டுடன் கோலி இரண்டாமிடத்தில் உள்ளார். 41 முறை அரைசதங்களை கடந்த கோலி, அவற்றில் 23 முறை சதத்தை எட்டியுள்ளார். 

இந்த விஷயத்தில் பிராட்மேனுக்கு அடுத்து கோலி தான். 
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!