அது என் வேலை இல்லங்க.. கருண் நாயர் விஷயத்தில் கடுப்பான கோலி

By karthikeyan VFirst Published Oct 4, 2018, 10:52 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் சேர்க்கப்படாதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு விராட் கோலி காட்டமாக பதிலளித்துள்ளார்.
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் சேர்க்கப்படாதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு விராட் கோலி காட்டமாக பதிலளித்துள்ளார்.

இந்தியாவிற்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று காலை 9.20 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரோஹித் சர்மா, கருண் நாயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயர், ஒரு போட்டியில் கூட ஆட வைக்கப்படவில்லை. 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட கருண் நாயருக்கு ஆட வாய்ப்பு வழங்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரே இதுதொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் கூட ஆடவைக்கப்படாத கருண் நாயர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை. 

இதையடுத்து தேர்வுக்குழு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இங்கிலாந்து தொடரில் ஆட வாய்ப்பே வழங்கப்படவில்லை. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் ஏன் ஒதுக்கப்பட்டேன் என்பதே தெரியவில்லை என கருண் நாயர் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக கருண் நாயரிடம் தேர்வுக்குழு பேசியதாகவும் உள்ளூர் போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடினால், டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், கருண் நாயர் விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள கேப்டன் கோலி, கருண் நாயர் அணியில் சேர்க்கப்படாதது குறித்து ஏற்கனவே தேர்வுக்குழு சார்பில் விளக்கமளிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்ட ஒரு விஷயம் குறித்து நானும் பேசுவது சரியாக இருக்காது. தேர்வாளர்கள் அவர்களின் பணியை செய்துள்ளார்கள். அனைவரும் அவரவர் பணிகளை செய்துவருகிறார்கள். அதனால் வெளியிலிருந்து பேசப்படும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்து முடியாது. 

தேர்வுக்குழு தலைவர் இதுகுறித்து ஏற்கனவே பேசிவிட்டதால் நான் கருத்து தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. வீரர்களை தேர்வு செய்வது என் பணியல்ல. அனைவரும் அவரவர் பணி குறித்து அறிந்திருக்க வேண்டும். அணி தேர்வு என்னுடைய பணியல்ல என விளக்கமளித்துள்ளார்.
 

click me!