இன்று ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்...” வியந்துபோன விராட் கோலி!

First Published May 18, 2018, 12:47 PM IST
Highlights
Virat Kohli Compares AB de Villiers To A Marvel Superhero After Miracle Catch


ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தில், ஐதராபாத் அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோர்ட்டில் நின்ற டிவில்லியர்ஸ் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார்.

இது குறித்து  பேசிய விராட் கோலி; வெற்றி உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் இருந்தது. ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, கிராண்ட் ஹோம் பேட்டிங் அபாரமாக இருந்தது.

எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவரது ஷாட்டுகள் இன்னமும் எனது பிரமிப்பில் இருந்து செல்லவில்லை. இந்த வெற்றி உத்வேகத்தை கடைசி போட்டியில் (ராஜஸ்தானுக்கு எதிராக) கொண்டு செல்வோம்.

தற்போது 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொயின் அலி தனது பணியை நன்றாக செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இரு கைகளிலும் நன்றாக பிடித்து கொண்டுள்ளார். எங்களது சொந்த மைதானமான பெங்களூரில் இது கடைசி ஆட்டம். ரசிகர்களின் ஆதரவு அற்புதமாக இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

Saw Live today! 😮 pic.twitter.com/mUuGVKuTn4

— Virat Kohli (@imVkohli)
click me!