பந்தை மைதானத்துக்கு வெளியே துரத்திய டிவில்லியர்ஸ்... டோனி சிக்ஸரை பின்னுக்கு தள்ளி சாதனை!

First Published May 18, 2018, 12:33 PM IST
Highlights
de Villiers outrageous 360 degree six


நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வீரர் டிவில்லியர்ஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தை விட்டு வெளியில் சென்றது.

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

பெங்களூரு அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 24 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தாலும், அதையும் மைதானத்துக்கு வெளியில் அனுப்பினார் டி வில்லியர்ஸ். 106 மீட்டர் தூரத்துக்கு அடிக்கப்பட்ட அந்த சிக்ஸர் மைதானத்தின் மேற்கூரையில் விழுந்தது.

இதுவே இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் அடிக்கப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய சிக்ஸராகும். இந்த லிஸ்டில் முதல் மற்றும் ஐந்தாவது இடத்திலும் டி வில்லியர்ஸ் தான் உள்ளார். அவர் சமீபத்தில் நடந்த மற்றொரு போட்டியில் 111 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்ஸரை அடித்தார். அந்த முறையும் பந்து மைதானத்தை விட்டு வெளியில் சென்றது.

இந்த லிஸ்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேபடன் டோனி அடித்த 108 மீட்டர் சிக்ஸர் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

 டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவது இது 18-வது முறையாகும். அந்த பட்டியலில் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 20 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளது குறுப்பிடத்தக்கது.

click me!