
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களுக்கு முன்பு நடக்கவுள்ள பெண்களுக்கான டி 20 போட்டிக்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆடவர் அணிக்கு ஐபிஎல் டி-20 போட்டிகள் நடத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது மகளிர் பிரிவிலும் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அதனொரு பகுதியாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மும்பையில் வரும் 22-ஆம் தேதி தொடங்குகின்றன.
அதற்கு முன்னதகா மகளிர் காட்சி டி 20 போட்டி நடத்தப்படுகிறது. இதில் இந்திய மகளிர் அணியினர் மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளைச் சேர்ந்த 10 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் டிரப்லைசர்ஸ் மற்றும் ஐபிஎல் சூப்பர்நோவாஸ் என 2 அணிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
டிரப்லைசர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானாவும், சூப்பர் நோவாஸுக்கு ஹர்மன்பிரீத் கெளரும் கேப்டன்களாக செயல்படுவர். இரு அணிகளிலும் 13 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.