
யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் அதெலெட்டிகோ மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்று மீண்டும் ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது.
யூஇஎஃப்ஏ சார்பில் யுரோப்பா லீக் கால்பந்துபோட்டிகள் கிளப் அணிகளுக்காக லியானில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், பிரான்சின் ஒலிம்பிக் மார்செய்ல் அணியும் - ஸ்பெயினின் அதெலெட்டிகோ மாட்ரிட் அதெலெட்டிகோ மாட்ரிட் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அதெலெட்டிக்கோ அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதெலெட்டிக்கோ அணியின் அன்டோனி கிரைஸ்மேன் 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த சீசனில் அவர் 29 கோல்களை அடித்துள்ளார்.
கடந்த 2010, 2012-இலும் யுரோப்பா லீக் சாம்பியன் பட்டத்தை அதெலெட்டிக்கோ அணி வென்றிருந்தது. எனினும் 2014, 2016 சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் யுரோப்பா லீக் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய கால்பந்து அமைப்பில் ஸ்பெயின் நாட்டு கால்பந்து கிளப்புகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.