மத்தவங்களா இருந்தா மிஞ்சி போனா என்ன பண்ணிருப்பாங்க..? தோனி தான் கெத்து.. தல வேற லெவல்ங்க

By karthikeyan VFirst Published Feb 23, 2019, 3:45 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 44வது ஓவரில் தோனியும் கேதர் ஜாதவும் தலா ஒரு ரன்னையே எடுத்தனர். 

கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே சொதப்பினார். அந்த போட்டியில் விஜய் சங்கரின் ஆட்டம், அவரது தன்னம்பிக்கையை தளர செய்தது. எனினும் அந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்குள்ளாக அதிலிருந்து மீண்டெழுந்து நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடி, உலக கோப்பையில் தனது பெயர் பரிசீலிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் விஜய் சங்கர். 

ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்த விஜய் சங்கர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தற்போது உலக கோப்பை அணியில் தனது பெயரை பரிசீலிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு விஜய் சங்கர் அளித்த பேட்டியில் தோனியிடமிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். 

அப்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனி இலக்கை விரட்டிய விதம் குறித்து பேசுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி ஆடியதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்றாலும் அடிக்க முடியும். அனைத்து பந்துகளையுமே பவுண்டரி அடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பவுண்டரியே போதும் என்று தோனி ஆடிய விதத்திலிருந்து கற்றுக்கொண்டேன். இலக்கை விரட்டும்போது அதை எளிதாக்கிவிடுவார் தோனி. அவருக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக தெரியும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 44வது ஓவரில் தோனியும் கேதர் ஜாதவும் தலா ஒரு ரன்னையே எடுத்தனர். ஆனாலும் அதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அந்த நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் இருப்பதே முக்கியம். அதைத்தான் செய்தார்கள். மற்ற வீரர்களாக இருந்தால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவை அடிக்க நினைத்திருப்பார்கள். அப்படி ஒருவேளை அடித்து ஆடியிருந்தால் ரன்கள் கிடைத்திருக்கும், இல்லையென்றால் விக்கெட்டை இழந்திருப்போம். ஆனால் இந்த ஓவரில் ஒரு ரன் தான் எடுத்திருக்கிறோம். ஆனாலும் வெற்றி பெறுவோம் என்று தோனி ஆடுவது வேற லெவல். சூழலின் நெருக்கடிகளை பார்த்து பயப்படாமல் ஆட வேண்டும் என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டதாக விஜய் சங்கர் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் தேவை. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 ரன்களிலும் தவான் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய கோலி, 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். 113 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், தோனியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். 

அந்த சூழலில் நிதானத்தை கடைபிடித்த தோனி, அந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை அடித்தார். ஹாட்ரிக் அரைசதம் அடித்த தோனி, தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்து ஆடினார். தோனிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேதர் ஜாதவும் அரைசதம் அடித்தார். கடைசிவரை அவசரப்படாமல் இருவரும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி, கடைசி ஓவரில் இலக்கை எட்டினர். கோலியின் விக்கெட்டுக்கு பிறகு விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் தோனியும் கேதர் ஜாதவும் இணைந்து இலக்கை எட்டினர். 

இந்த போட்டியில் தோனி ஆடியதை குறிப்பிட்டுத்தான் விஜய் சங்கர் பேசியுள்ளார். 
 

click me!