
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் விதிமுறையை மீறியதாக புணே அணியின் விக்கெட் கீப்பர் தோனிக்கு வார்னிங்க் கொடுத்தார் நடுவர்.
மும்பை – புணே அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை பேட்டிங்கின்போது கிரண் போலார்டுக்கு நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்கவில்லை.
இதனையடுத்து டிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுக முயற்சித்தார் தோனி. ஆனால், ஐபிஎல் போட்டியில் நடுவரின் முடிவே இறுதியானது. டிஆர்எஸ் கிடையாது என்ற காரணத்தால் தோனி எச்சரிக்கப்பட்டார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.