கிடைக்கும் அத்தனை பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றுவோம் – இந்திய ஹாக்கி கேப்டன் ராணி நம்பிக்கை

Asianet News Tamil  
Published : Apr 08, 2017, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
கிடைக்கும் அத்தனை பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றுவோம் – இந்திய ஹாக்கி கேப்டன் ராணி நம்பிக்கை

சுருக்கம்

Making such a penalty goal to get the opportunity Queen confident Indian hockey captain

உலக மகளிர் ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதியில் கிடைக்கும் அத்தனை பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றுவோம் என்று இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி தெரிவித்துள்ளார்.

உலக மகளிர் ஹாக்கி லீக் (ரவுண்ட்-2) போட்டி கனடாவின் வான்கோவர் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி தனது அரையிறுதியில் பெலாரஸுடன் நாளை மோதுகிறது.

இந்த நிலையில் அது தொடர்பாக இந்திய ஹாக்கி கேப்டன் ராணி கூறியது:

“பெனால்டி வாய்ப்புகளில் இந்திய அணி கோலடிக்க தடுமாறுவது கவலையளிக்கிறது. அரையிறுதியில் பெலாரஸை வீழ்த்த வேண்டுமானால் பெனால்டி வாய்ப்புகளில் கோலடிப்பது அவசியமாகும். அதற்காக பயிற்சியின்போது கூடுதல் நேரத்தை செலவிடுகிறோம்.

பெலாரஸுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பெலாரஸும் வலுவான அணிதான். எனவே அந்த அணியை வீழ்த்துவதற்கு இந்திய வீராங்கனைகள் ஒன்றிணைந்து செயல்படுவதோடு, பெனால்டி வாய்ப்புகளை வீணடிக்காமல் கோலடிக்க முயற்சிக்க வேண்டும்.

அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் போட்டியில் நிச்சயம் இறுதிச்சுற்றுக்கு முன்னேற வேண்டும். அதில் வென்றுவிட்டால் உலக ஹாக்கி லீக் பைனலுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற இலக்கோடுதான் இங்கு வந்திருக்கிறோம். அரையிறுதிக்காக சிறப்பான முறையில் தயாராகியிருக்கிறோம்” என்று கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Riyan Parag | டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!
Riyan Parag: டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!