
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு லியாண்டர் பய்ஸ், “நாட்டுக்காக விளையாடுங்கள்” என்று சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் என்னை சிறப்பாக விளையாட வைத்தத் என்று இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார் தெரிவித்தார்.
முதல் நாளில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் வெற்றி கண்டனர்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் பெங்களூரில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியின் முதல் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் மற்றும் உஸ்பெகிஸ்தானின் டெய்முர் இஸ்மெயி மோதினர்.
இந்த ஆட்டத்தில் ராம்குமார் 6-2, 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் டெய்முர் இஸ்மெயிலை வீழ்த்தினார்.
வெற்றி குறித்துப் ராம்குமார் பேசியது, "போட்டியில் களமிறங்குவதற்கு முன்னதாக லியாண்டர் பயஸிடம் பேசினேன். அப்போது அவர், “நாட்டுக்காக விளையாடுங்கள். டேவிஸ் கோப்பை என்பது மிகச்சிறந்த போட்டி. எனவே உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என கூறினார். இதேபோல் ரோஹன் போபண்ணாவும் சில அறிவுரைகளை கூறினார். அதனால் சிறப்பாக ஆட முடிந்தது' என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.