யு.எஸ். ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் அஜய் ஜெயராம்...

 
Published : Jun 15, 2018, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
யு.எஸ். ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் அஜய் ஜெயராம்...

சுருக்கம்

US. India Ajay Jayaram to open 2nd Badminton Tournament

யு.எஸ். ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் அஜய் ஜெயராம்.

யு.எஸ். ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைப்பெற்றது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவின் யுன் கியு லீயுடன் மோதினார்  இந்திய வீரர் அஜய் ஜெயராம்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 26-24, 17-21, 21-13 என்று போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

கடந்தாண்டு தேசிய சாம்பியன் போட்டியின்போது காயமடைந்த ஜெயராம் தற்போது குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார். 

அடுத்தச் சுற்றில் பிரேசிலின் கோர் கோஹலேவை எதிர்கொள்கிறார் ஜெயராம்.

அதேபோன்று, மகளிர் பிரிவில் இந்தியாவின் அனுரா பிரபு தேசாய் மற்றும் கனடாவின் ரேச்சல் ஹோண்ட்ரைச் மோதினர்.

இதில், 9-21, 17-21 என்ற செட் கணக்கில் கனடாவின் ரேச்சல் ஹோண்ட்ரைச்சிடம் தோல்வியடைந்தார் அனுராதா.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!