குழந்தைகளின் ஃபிட்னெஸ் மற்றும் விளையாட்டு உலகம் "upUgo"

By karthikeyan VFirst Published Aug 20, 2020, 4:01 PM IST
Highlights

இந்திய குழந்தைகளுக்கு குறைவான கட்டணத்தில் ஃபிட்னெஸ் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை வழங்கிவரும் upUgo விளையாட்டு பயிற்சி மையம், குழந்தைகளுக்கான வரப்பிரசாதம்.

குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆர்வத்திற்கு தீர்வாக, அனைவருக்கும் ஏற்றவகையில் மலிவான விலையில் குழந்தைகள் விளையாடுவதற்கான சூழலை, முன்னாள் சர்வதேச டெகாத்லெட் மற்றும் ஃபிட்னெஸ் ஆர்வலர்கள் இணைந்து ஒரு பிளாட்ஃபார்மை உருவாக்கியிருக்கிறார்கள். upUgo என்ற விளையாட்டு மையத்தில், குழந்தைகள் வளர்ந்து பருவ வயதை அடையும் வரையில் அவர்கள் முழுமையான வளர்ச்சியடைய ஏதுவாக பயிற்சியளிக்கப்படுகிறது.

2019ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவில் தொடங்கப்பட்ட upUgo அனைத்துவயது குழந்தைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளை அளிப்பதில் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. இந்தக்கால குழந்தைகளின் உடற் செயல்பாடுகள் மிகக்குறைவு. குறிப்பாக மெட்ரோ பொலிடன் நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு உடல்ரீதியான செயல்பாடுகளும் உடலை வருத்தி ஆடும் விளையாட்டுகளும் மிக மிகக்குறைவு. குழந்தைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மையங்கள் அதிகமான கட்டணம் வசூலிப்பதாலும், அனைவரும் அணுகமுடியாத படி இருப்பதாலும் குழந்தைகளின் உடற்செயல்பாடுகள் குறைவு. அதுமட்டுமல்லாது, தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சிபெற்ற நிபுணர்கள் பற்றாக்குறை, சரியான  விளையாட்டு திட்டங்கள் இல்லாதது ஆகிய சிக்கல்களும் உள்ளன. இதுபோன்ற சிக்கல்களையெல்லாம் வளர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் அடுத்த தலைமுறையினர் மீது அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக upUgo உழைத்துவருகிறது. நவீனகால வாழ்க்கை முறை, அதன் விளைவாக ஏற்படக்கூடிய உடல் ஆரோக்கிய அபாயங்கள், போதுமான விளையாட்டு மற்றும் ஃபிட்னெஸ் செயல்பாடுகள் இல்லாதது ஆகியவற்றிற்கான தீர்வை காணும் கட்டாயத்தில் உள்ளோம். அதற்கான வாய்ப்பை upUgo ஏற்படுத்தி தருவதாக அதன் நிறுவன தலைவர் அமித் குப்தா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் உடற்தகுதி தொகுதிகள் வயதுக்கு ஏற்ற திட்டங்களை உள்ளடக்கியது. அவை அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டவை மற்றும் சர்வதேச பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. உடற்தகுதி, விளையாட்டு, ஊட்டச்சத்து, யோகா மற்றும் மனவளப் பயிற்சி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் இந்த திட்டங்கள் வழங்கப்படுகின்றன. டிஜிட்டல், உடல் மற்றும் கலப்பின மாதிரியுடன் வழங்குவதால், இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் பயிற்சி பெறமுடியும். இதுதான், மற்ற குழந்தைகள் விளையாட்டு மையத்திலிருந்து upUgo வேறுபடுத்தியும் தனித்துவமாகவும் காட்டுகிறது. 

பி 2 சி வடிவத்துடன் (காண்டோமினியம் மட்டத்தில்) முதலில் தொடங்கி, பின்னர் பி 2 பி தீர்வுகளுக்கு நகர்ந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சேவையை வழங்கியது. கொரோனா காலத்தில் பெங்களூரு முழுவதும் 30க்கும் மேற்பட்ட காண்டோமினியங்களில் பாதிக்கப்பட்டது. மற்றவற்றை போலவே, upUgo குழந்தைகள் விளையாட்டு பயிற்சி மையமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. டிஜிட்டல் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளை கலந்துகொள்ள வைக்கவும் இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்து upUgo டிஜிட்டல்மயமாக்கியது. ஹைதராபாத், இந்தூர், கான்பூர், டெல்லி, புனே என நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் சேவையை பெற்றுவரும் வாடிக்கையாளர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் upUgo-வின் தலைமை தயாரிப்பு அதிகாரி வினோத் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

எளிதாக அணுகக்கூடிய மற்றும் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை எளிதாக்கும் நோக்கில், upUgo சமீபத்தில் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கும். upUgo புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், முதற்கட்டமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது.

ஆற்றல்மிக்க நேரங்கள் மற்றும் மெய்நிகர் எதிர்காலத்தை குழந்தைகளுக்கு வழங்கும் விதமாக, அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் upUgo, அனைத்து குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்து, சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றுகிறது. உங்கள் குழந்தைகளின் ஃபிட்னெஸ் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் upUgoவிற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

upUgo-வில் பயன்பெறும் 10 சிறுவனின் தாய் கூறியதாவது: ”எனது மகன் upUgo-வில் சேர்ந்த 15 நாட்களில், அவனது எனர்ஜி லெவல் மற்றும் ஸ்டாமினா அதிகமானதை என்னால் கண்கூடாக பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் புதிய உற்சாகத்தை எதிர்நோக்குகிறான்” என்று அந்த தாய் தெரிவித்துள்ளார்.

தனது 2 குழந்தைகளை upUgo-வில் சேர்த்துவிட்ட மற்றொரு தாய் கூறியதாவது: எனது குழந்தைகளின் சகிப்புத்தன்மை, நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமை ஆகியவற்றில் மிகப்பெரிய முன்னேற்றத்தை நான் பார்க்கிறேன். பயிற்சியாளர்கள், ஒவ்வொரு செசனையும் மிகவும் விறுவிறுப்பாக எடுத்துச்செல்லும் விதம் அபாரமானது என்று தெரிவித்துள்ளார்.
 

click me!