
அண்டர் 17 கால்பந்து போட்டியில் எந்தெந்த அணிகள், எந்த பிரிவில், எந்த அணியுடன் மோதும் என்பதை ஜூலை 7-ஆம் தேதி குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அண்டர் 17 என்னும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 28–ஆம் தேதி வரை நடக்கிறது.
கொல்கத்தா, டெல்லி, கௌகாத்தி, கோவா, கொச்சி, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.
போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்த சர்வதேச கால்பந்து சங்க நிர்வாகிகள் போட்டியின் முதல் கட்ட அட்டவணையை அறிவித்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்படுகின்றன. மும்பையில் ‘ஏ’ பிரிவு ஆட்டமும், டெல்லியில் ‘பி’ பிரிவு ஆட்டமும், கோவாவில் ‘சி’ பிரிவு ஆட்டமும், கொச்சியில் ‘டி’ பிரிவு ஆட்டமும், கௌகாத்தியில் ‘இ’ பிரிவு ஆட்டமும், கொல்கத்தாவில் ‘எப்’ பிரிவு ஆட்டமும் நடக்கிறது.
இதன் இறுதிப்போட்டி அக்டோபர் 28–ஆம் தேதி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடக்கிறது.
மும்பை மற்றும் கௌகாத்தியில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு இடத்திலும் 2–வது சுற்று ஆட்டமும், கோவா, கௌகாத்தி, கொச்சி, கொல்கத்தாவில் காலிறுதி ஆட்டங்களும் நடைபெறுகிறது.
தொடக்க நாள் லீக் ஆட்டங்கள் மும்பை, டெல்லியில் நடக்கும்.
இந்த போட்டியில் எந்தெந்த அணிகள் எந்த பிரிவில் இடம் பெறும். எந்த அணியுடன் மோதும் என்பது? மும்பையில் ஜூலை 7–ஆம் தேதி நடைபெறும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.