19 வருஷத்துக்கு பிறகு உமேஷ் செய்த சம்பவம்!! தனி ஒருவனாக வெஸ்ட் இண்டீஸை மிரட்டி திறமையை நிரூபித்த உமேஷ் யாதவ்

By karthikeyan VFirst Published Oct 13, 2018, 2:02 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக 10 பந்துகள் மட்டுமே வீசிவிட்டு வெளியேறியபோதும், தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக தன்னம்பிக்கையுடன் அபாரமாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்துள்ளார் உமேஷ் யாதவ்.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக 10 பந்துகள் மட்டுமே வீசிவிட்டு வெளியேறியபோதும், தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக தன்னம்பிக்கையுடன் அபாரமாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்துள்ளார் உமேஷ் யாதவ்.

புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ், முன்னுரிமை பெறாமலேயே இருந்துவருகிறார். அவர்களுக்கு முன்பிலிருந்தே இந்திய அணிக்காக ஆடிவரும் பவுலராக இருந்தாலும் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய இருவர்தான் முன்னணி பவுலர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றனர். 

உமேஷ் யாதவ் மூன்றாவது அல்லது நான்காவது பவுலிங் தேர்வாகவே இருந்துவருகிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்து, அபாரமாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசையை சரித்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் உமேஷ் யாதவ். 

இந்த 6 விக்கெட்டுகளில் 2 போல்டு, 2 எல்பிடபிள்யூ  என மொத்தம் 4 விக்கெட்டுகள் ஸ்டம்பிறகு நேராக துல்லியமாக வீசப்பட்ட பந்துகளில் கிடைத்த விக்கெட்டுகள். நல்ல வேகத்துடன் அவுட் ஸ்விங் வீசி வெஸ்ட் இண்டீஸை மிரட்டினார் உமேஷ் யாதவ்.

Sight to behold: Umesh Yadav sends stumps flying https://t.co/tF3wQhEaOj

— Baahubali (@bahubalikabadla)

வேகப்பந்தோ, ஸ்பின்னோ, எந்த விதமான பவுலிங்காக இருந்தாலும் அவர்களது ஜோடி இல்லையெனில் அது மற்றொரு பவுலரிடம் தொய்வை ஏற்படுத்தும். ஆனால் ஷர்துல் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசிவிட்டு காயம் காரணமாக வெளியேறிவிட்ட நிலையிலும், தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு அபாரமாக பந்துவீசினார் உமேஷ் யாதவ். 

இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதுதான் உமேஷ் யாதவின் மிகச்சிறந்த பவுலிங். 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 1999ம் ஆண்டுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை உமேஷ் யாதவ் பெற்றுள்ளார். முன்னதாக 1999ம் ஆண்டு மொஹாலியில் நியூசிலாந்துக்கு எதிராக ஜவகல் ஸ்ரீநாத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் கடைசி. அதன்பிறகு 19 ஆண்டுகள் கழித்து உமேஷ் யாதவ்தான் தற்போது ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
 

click me!