
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மூன்று முறை சாம்பியனான இந்தியா, லீக் சுற்றுகளில் தோல்வியே சந்திக்காமல் முன்னேறி வந்துள்ளது. வங்கதேசம் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டுள்ளது.
இரு அணிகளுக்குமே லீக் சுற்றுக்கு பிறகு, போதிய அவகாசம் கிடைத்ததால், அவை திறம்படத் தயாராகியிருக்கும். கடந்த நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, வங்கதேசத்திடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.
அதற்கு இந்தியா தற்போது பதிலடி கொடுக்கலாம். அணி வீரர்களைப் பொருத்த வரையில் பிருத்வி ஷா, சுபம் கில் உள்ளிட்டோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். அனுகுல் ராய், ஷிவம் மாவி ஆகியோர் பந்துவீச்சில் உறுதுணையாக இருக்கின்றனர்.
வங்கதேச அணியில் தெளஹித் ஹிருதோய், அல்ரவுண்டர் ஹுசைன் ஆகியோர் ரன்கள் குவிக்கலாம். பந்துவீச்சில் ஹசன் மஹுத், அஃபிப் ஹுசைன் உள்ளிட்டோர் பலம் காட்ட உள்ளனர்.
இதனிடையே, இந்திய அணியில் 6 பேரும், வங்கதேச அணியில் 5 பேரும் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.