
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் - டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் நாளை மோதுகின்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சைமோனாவும், போட்டித் தரவரிசையில் 21-வது இடத்தில் இருந்த ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரும் மோதினர். இதில் சைமோனா 6-3, 4-6, 9-7 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கியும், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸும் மோதினர். இதில், வோஸ்னியாக்கி 6-3, 7-6(7-2) என்ற செட் கணக்கில் எலிஸ் மெர்டன்ஸை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபனில் வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது இது முதல் முறையாகும். அதேவேளையில், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் வெற்றிப்பெற்ற இருவரும் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் நாளை மோதுகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.