
நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 18.3 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தானில் அதிகபட்சமாக ஃபகார் ஜமான் 50 ஓட்டங்கள் எடுத்தார். பாபர் ஆஸம் 50 ஓட்டங்கள் , ஹசன் அலி 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் பென் வீலர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் சேன்ட்னர் 37 ஓட்டங்கள் , பென் வீலர் 30 ஓட்டங்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற் ரன்களில் வீழ்ந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஃபகார் ஜமான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியை அடுத்து மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்ததால், தொடர் சமநிலையில் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.