
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச், பேட்ஸ்மென்களுக்கான அநீதி என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஏற்கனவே இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வெறும் 187 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி, முதல் இன்னிங்சில் 200 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட்டானது.
இதில் கோலி, புஜாரா அரைசதங்களுடன் 104 ரன்களையும் புவனேஷ்வர் குமார் 30 ரன்களையும் உதிரிகள் வகையில் 26 ரன்களையும் சேர்த்து 160 ரன்கள் வந்தது. மற்றவர்கள் சேர்ந்து 27 ரன்களையே எடுத்தனர். அதுவும் கோலிக்கு 11 மற்றும் 32 ரன்களில் தென் ஆப்பிரிக்கா கேட்ச் விட்டதாலும் புஜாரா ஜீரோவில் இருந்த போது ஒரு பிளம்ப் எல்.பியை அம்பயர்ஸ் கால் என்று ரிவியூ செய்யாமல் விட்டதாலும் இந்த ரன் எண்ணிக்கை வந்தது.
பிட்சில் வேகம், பவுன்ஸ், ஸ்விங் என்று பேட்டிங்குக்குக் கடும் சவால் அளித்து வருகிறது. 8 ஓவர்களில் 7 மெய்டன்கள், 1 ரன் ,1 விக்கெட் என்று தென்னாப்பிரிக்காவின் முதல் 8 ஓவர்கள் சிக்கன வீச்சுக்கான சாதனையை பிளாண்டர் நிகழ்த்தினார்.
இந்நிலையில் ஜோகன்னஸ்பர்க் பிட்ச் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கங்குலி தனது டுவிட்டர் பதிவில், இந்தப் பிட்சில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது அநீதியாகும். 2003ல் நியூஸிலாந்தில் இதேபோன்ற பிட்ச்களை எதிர்கொண்டோம். இத்தகைய பிட்ச்களில் பேட்ஸ்மென்களுக்கு வாய்ப்பு குறைவு. ஐசிசி இதனைக் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.