
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் வரும் சனிக்கிழமை கொல்கத்தாவில் மோதுகின்றன.
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியைத் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ரியான் பிரெவ்ஸ்டர் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். 10-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த ரியான் 39 மற்றும் 77-வது நிமிடங்களில் அடுத்த இரு கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனையை படைத்தார்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் அடித்த 2-வது ஹாட்ரிக் இதுவாகும். முன்னதாக காலிறுதியில் அமெரிக்காவுக்கு எதிராக அவர் ஹாட்ரிக் கோலடித்தார்.
அதேசமயத்தில் பிரேசில் தரப்பில் வெஸ்லே 21-வது நிமிடத்தில் கோலடித்ததார். ஆனால், அது வெற்றிக்கான கோலாக அமையவில்லை.
அதேபோன்று நவி மும்பையில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் மாலி அணியைத் தோற்கடித்தது.
ஸ்பெயின் தரப்பில் அபேல் ரூயிஸ் 19 மற்றும் 43-வது நிமிடங்களில் கோலடிக்க, அந்த அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஃபெரான் கோலடிக்க, ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
மறுமுனையில் போராடிய மாலி அணி 74-வது நிமிடத்தில் ஒரே ஒரு ஆறுதல் கோலடித்தது. இந்த கோலை டியே அடித்தார்.
கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டம் மாலி - பிரேசில் அணிகள் இடையே நடைபெறுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.