யு-17 கால்பந்து: இரண்டாவது வெற்றியைப் பெற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா…

Asianet News Tamil  
Published : Oct 10, 2017, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
யு-17 கால்பந்து: இரண்டாவது வெற்றியைப் பெற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா…

சுருக்கம்

U-17 Football America won second time and advanced to quarter-finals

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் அமெரிக்காவும், கானா அணியும் மோதின. இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரரான அயோ அகினோலாவை களமிறக்கியது அமெரிக்கா.  அதற்கு 75-வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் கோஸ்லின் கொடுத்த பாஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அகினோலா, அதில் கோலடிக்க, அதுவே அமெரிக்காவின் வெற்றிக் கோலாக அமைந்தது.

இதன்மூலம் இந்தத் தொடரில் 2-வது வெற்றியைப் பெற்ற அமெரிக்கா, நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

நவி மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது மாலி. 

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய மாலி அணி, ஆரம்பத்தில் கிடைத்த சில நல்ல கோல் வாய்ப்புகளை நழுவவிட்டது. இதன்பிறகு 38-வது நிமிடத்தில் ஜெமூசா கோலடிக்க, மாலி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் டியேவும், 86-வது நிமிடத்தில் கொனாட்டேவும் கோலடிக்க, மாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

டெல்லியில் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே (அதாவது 49-ஆவது நிமிடத்தில்) கொலம்பிய வீரர் பீனாலோஸா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து போராடிய இந்திய அணி 82-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை ஜேக்சன் அடித்தார். இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் அடுத்த நிமிடத்திலேயே பீனாலோஸா கோலடிக்க, கொலம்பியாவின் வெற்றி உறுதியானது. இறுதியில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!