
ரஷியாவில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க எகிப்து அணி தகுதி பெற்றுள்ளது.
ரஷியாவில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதிச் சுற்று எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் நடைபெற்றது.
ஆப்பிரிக்க அணிகள் இடையிலான தகுதிச் சுற்றில் எகிப்து அணியும், காங்கோ அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் காங்கோ அணியை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தது எகிப்து அணி.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் எகிப்தின் முகமது சலா கோலடிக்க, அதற்கு பதிலடியாக 86-வது நிமிடத்தில் காங்கோவின் மாற்று ஆட்டக்காரர் அர்னால்ட் கோலடித்தார். இதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது.
இதன்பிறகு இரு அணிகளும் போராட, 'இஞ்சுரி' நேரத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் சலா அசத்தலாக கோலடித்தார். இதனால் எகிப்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
கடைசியாக 1990-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற எகிப்து அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து அணி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருப்பது அந்த நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.