2018 ஐபிஎல் ஏலம்.. அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள்

Asianet News Tamil  
Published : Jan 29, 2018, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
2018 ஐபிஎல் ஏலம்.. அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள்

சுருக்கம்

top ten players sale in IPL auction

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இதுவரை ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திவந்த வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். மாறாக இந்திய இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

தோனி, கோலி, ரோஹித், ரெய்னா, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்களை அந்தந்த அணிகள் ஏலத்திற்கு முன்னதாகவே தக்கவைத்துக் கொண்டன. அவர்கள் தவிர ஏலம் விடப்பட்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் போன முதல் 10 வீரர்களை பார்ப்போம்..

இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள்:

1. பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.5 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)


2. ஜெய்தேவ் உனாட்கட் - ரூ. 11.5 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

3. லோகேஷ் ராகுல் - ரூ. 11 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)


4. மனீஷ் பாண்டே - ரூ. 11 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

5. கிறிஸ் லின் - ரூ. 9.6 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)


6. மிட்செல் ஸ்டார்க் - ரூ. 9.4 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)


7. கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 9 கோடி (டெல்லி டேர்டெவில்ஸ்)


8. ரஷித் கான் - ரூ. 9 கோடி ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

9. க்ருணல் பாண்டியா - ரூ. 8.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)


10. சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!
IND VS SA: 'மில்லர் கில்லர்' மரண அடி.. டோட்டலாக சரண்டர் ஆன இந்தியா.. தென்னாப்பிரிக்கா மாஸ் வெற்றி!