தோனி மட்டும் இந்த சம்பவத்த செய்யல!! தோனியை மிஞ்சுன ஜித்தன்கள் எல்லாம் இருக்காங்க

By karthikeyan VFirst Published Sep 30, 2018, 12:36 PM IST
Highlights

இந்திய அணியின் சீனியர் வீரரும் அனுபவமான விக்கெட் கீப்பருமான தோனி, ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச வீரர்கள் இருவரை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். இரண்டுமே முக்கியமான விக்கெட்டுகள்.
 

இந்திய அணியின் சீனியர் வீரரும் அனுபவமான விக்கெட் கீப்பருமான தோனி, ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச வீரர்கள் இருவரை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். இரண்டுமே முக்கியமான விக்கெட்டுகள்.

மின்னல்வேக ஸ்டம்பிங்குகள், ரன் அவுட்டுகளுக்கு பெயர்போன தோனி, ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கி சதமடித்த லிட்டன் தாஸை கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார். அதேபோல அந்த அணியின் கேப்டன் மோர்டஸாவையும் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். 

இதன்மூலம் 800 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றார். 800 விக்கெட்டுகளை கடக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் தோனி தான். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 580 இன்னிங்ஸ்களில் ஆடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் தோனி. இதில் 616 கேட்ச்களும் 164 ஸ்டம்பிங்குகளும் அடங்கும். 

தோனி 580 இன்னிங்ஸ்களில் ஆடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 800 விக்கெட்டுகளை கடக்கும் மூன்றாவது விக்கெட் கீப்பர் தோனி. இவருக்கு முந்தைய முதல் இரண்டு இடங்களை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரும் பிடித்துள்ளனர். 

596 இன்னிங்ஸ்களில் ஆடி 999 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்க் பவுச்சர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் 953 கேட்ச்கள் மற்றும் 46 ஸ்டம்பிங்குகள் ஆகும்.

பவுச்சருக்கு அடுத்த இடத்தில் கில்கிறிஸ்ட் உள்ளார். 485 இன்னிங்ஸ்களில் ஆடி 905 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த கில்கிறிஸ்ட் இரண்டாமிடத்தில் உள்ளார். இதில் 813 கேட்ச்கள் மற்றும் 92 ஸ்டம்பிங்குகள் ஆகும்.

click me!