டிஎன்பிஎல் அப்டேட்: சேப்பாக் அணியை ஓடவிட்டது தூத்துக்குடி; 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Asianet News Tamil  
Published : Aug 02, 2017, 09:31 AM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
டிஎன்பிஎல் அப்டேட்: சேப்பாக் அணியை ஓடவிட்டது தூத்துக்குடி; 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி…

சுருக்கம்

TNPL Update chepauk defeated by Thoothukudi Won by 27 runs ...

 

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணியில், தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் 61 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 107 ஓட்டங்கள் எடுத்து சதமடித்த பின்பு ஆட்டமிழந்தார்.

உடன் வந்த கெளஷிக் காந்தி 33 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 35 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து வந்த சுப்ரமணியன் 16 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 13 ஓட்டங்கள் எடுத்தார்.

இப்படி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது தூத்துக்குடி.

ஆகாஷ் சும்ரா 15 ஓட்டங்கள், எஸ்.பி.நாதன் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சேப்பாக் அணி தரப்பில் அலெக்ஸாண்டர் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய சேப்பாக் அணியில் ஆண்டனி தாஸ் மட்டும் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து ஆடிய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் அவுட்டானார்கள்.

தூத்துக்குடி தரப்பில் டேவிட்சன், ஸ்ரீனிவாஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இறுதியாக இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தூத்துக்குடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வெற்றியின்மூலம் தூத்துக்குடி அணி நல்ல ஃபார்மில் இருப்பது தெரிகிறது. ஏனெனில் நடப்புச் சாம்பியனான தூத்துக்குடி அணி தொடக்கம் முதலே வெற்றியை மட்டுமே பெற்று வருகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

5வது T20 போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து சிங்கப்பெண்கள் மாஸ்!
WPL 2026: ஆர்சிபி ரசிகர்கள் ஷாக்.. ஸ்டார் வீராங்கனை திடீர் விலகல்.. டெல்லியிலும் முக்கிய மாற்றம்!