
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஐந்தாவது முறை பங்கேற்றும் ஒருமுறை கூட வெற்றி பெறாத நடால், இந்த முறை வெற்றிப் பெற்றே ஆகனும் என்று வைராக்கியத்துடன் ஆடி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை வீழ்த்தினார்.
ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இரு முறை ஜேக் சாக்கின் சர்வீஸை முறியடித்த நடால், அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் தனக்கு சாதமாக்கி பந்தாடினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் முதல் ஆட்டத்தில் நடாலின் சர்வீஸை முறியடித்த ஜேக் சாக், 3-ஆவது ஆட்டத்தில் நடாலின் சர்வீஸில் சிக்கினார். இதன்பிறகு உஷாரானா நடால், ஜேக் சாக்கின் சர்வீஸை முறியடித்தால், இருவரும் 2-2 என்ற கணக்கில் சமன் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அபாரமாக ஆடிய நடால் மீண்டும் ஜேக் சாக்கின் சர்வீஸை முறியடித்து அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் பறித்து வெற்றி அடைந்தார்.
மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் ஐந்தாவது முறையாக கலந்து கொண்டுள்ள நடால், இதுவரை ஒரு முறைகூட இங்கு பட்டம் வென்றதில்லை. ஆனால், அந்த வெற்றிடத்தை இப்போது தீர்த்தே ஆகனும் என்று தீவிரமாக இருக்கிறார் நடால்.
நடால் தனது அரையிறுதியில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை எதிர்கொள்கிறார்.
நடாலும், ஃபாக்னினியும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் நடால் 7 முறையும், ஃபாக்னினி 3 முறையும் வெற்றி கண்டுள்ளனர். எனவே அரையிறுதியில் நடால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.