இந்திய பி டீமை பந்தாடியது தமிழக அணி; சாம்பியன் வென்று கொக்கரிப்பு…

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
இந்திய பி டீமை பந்தாடியது தமிழக அணி; சாம்பியன் வென்று கொக்கரிப்பு…

சுருக்கம்

Indian B team squad pantatiyatu TN Champion won the cackle

தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய 'பி' டீமை வீழ்த்தி சாம்பியன் வென்று வாகை சூடியது.

தமிழக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 91 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் குவித்தார்.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணியின் கெளஷிக் காந்தி 16 ஓட்டங்களையும், முருகன் அஸ்வின் ஓட்டம் ஏதுமின்றியும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 13 ஓட்டங்களும் எடுத்து அநியாயமாக அவுட் ஆனார்கள்.

இதனால் தமிழக அணி 10.3 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் ஜெகதீசனுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். அசத்தலாக ஆடினார். இந்த ஜோடி 136 ஓட்டங்கள் எடுத்து, தமிழகத்தின் மானத்தை காப்பாற்றியது.

ஜெகதீசன் 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் 91 பந்துகளில் 126 ஓட்டங்கள் எடுத்தூ அசத்தினார்.

இறுதியில் தமிழக அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய 'பி' அணி தரப்பில் தவல் குல்கர்னி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் ஆடிய இந்திய 'பி' அணியில் ஷிகர் தவன் 45, மணீஷ் பாண்டே 32, ஹர்பிரீத் சிங் 36, குருகீரத் சிங் 64 ஓட்டங்கள் எடுத்தனர். ஆனால், எஞ்சிய வீரர்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி 46.1 ஓவர்களில் 261 ஓட்டங்களுக்கு மொத்தமாக ஆட்டமிழந்தனர்.

தமிழகம் தரப்பில் ராஹில் ஷா 3 விக்கெட்டுகளையும், முகமது, சாய் கிஷோர் ஆகியோர்
தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அசத்தலாக ஆடிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக் கோப்பை.. ஸ்ட்ராங் டீமை களம் இறக்கும் இங்கிலாந்து.. ஆர்ச்சர் ரிட்டன்..!
நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!