2 பேர்ல யாருடா அவுட்டு..? தேர்டு அம்பயரையே கன்ஃபியூஸ் பண்ணிய பாகிஸ்தான் வீரர்கள்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 8, 2019, 11:05 AM IST
Highlights

ஷோயப் மாலிக்கும் ஹுசைன் டலட்டும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது, 12வது ஓவரை தென்னாப்பிரிக்க அணியின் ஸ்பின் பவுலர் ஷாம்சி வீசினார். 

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி, பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என வென்றது. 

இதையடுத்து நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில், கடைசி போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியது. அப்போது, ஷோயப் மாலிக்கும் ஹுசைன் டலட்டும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது, 12வது ஓவரை தென்னாப்பிரிக்க அணியின் ஸ்பின் பவுலர் ஷாம்சி வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை அடித்துவிட்டு மாலிக் ரன் ஓடினார். அந்த பந்தை தென்னாப்பிரிக்க வீரர் ஃபெலுக்வாயோ பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீச, ஓடினால் அவுட்டாகி விடுவோம் என்பதை அறிந்த டலட், கொஞ்ச தூரம் ஓடிவிட்டு திரும்பிவிட்டார். ஆனால் திரும்ப முடியாத அளவிற்கு மாலிக் ஓடிவந்துவிட்டார். எனவே இருவருமே ஒரே கிரீஸை நோக்கி ஓடினர். 

விக்கெட் கீப்பர் கிளாசன், ரன் அவுட் செய்தார். இருவரில் யார் அவுட் என்ற சந்தேகம் வந்தது. இதை ரிவியூ செய்து பார்த்த மூன்றாவது அம்பயரே குழம்பிப்போனார். இதையடுத்து இருவரில் யார் முன்னால் இருக்கிறார் என்பதை அறிய ஒரு கோடு போட்டு ஆய்வு செய்தார். அப்போது மாலிக் டலட்டிற்கு பின்னால் இருந்தது கண்டறியப்பட்டு மாலிக்கிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. இந்த ரன் அவுட்டில் முடிவெடுக்க அதிக நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. 2 கிரீஸ் போதாது என்று மூன்றாவதாக ஒரு கிரீஸ் போட்டு இருவரில் யார் அவுட் என ஆய்வு செய்யப்பட்டது. 

click me!