அவங்க 2 பேரையுமே இறக்குங்க!! நியூசிலாந்தை வீழ்த்த கும்ப்ளே கொடுக்கும் ஐடியா

By karthikeyan VFirst Published Feb 8, 2019, 10:13 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டி20 போட்டிகளில் அந்த அணியை வீழ்த்துவதற்கு அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டி20 போட்டிகளில் அந்த அணியை வீழ்த்துவதற்கு அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளன. 

வெலிங்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே அசத்திய நிலையில், இந்திய அணியோ மூன்றிலுமே சொதப்பியது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே அடித்து ஆடியது. அவ்வப்போது இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் கடைசிவரை அந்த அணியின் அதிரடியை கட்டுப்படுத்த முடியவில்லை. 219 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, இந்திய அணியை 139 ரன்களில் சுருட்டி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் மோசமான தோல்வி இதுதான். 

எனவே முதல் போட்டியில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருடனும் இந்திய அணி களமிறங்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார். 

முதல் போட்டியில் சாஹல் மட்டுமே ஆடினார். சாஹலுடன் ஆல்ரவுண்டர் குருணல் பாண்டியா, இரண்டாவது ஸ்பின் பவுலராக இருந்தார். ஆனால் இந்திய அணி அதன் முழுமையான பவுலிங் பலத்துடன் களமிறங்க வேண்டும் எனவும் குல்தீப் - சாஹல் ஆகிய இருவரையுமே அணியில் எடுத்து அவர்களுடன் மூன்றாவது ஸ்பின்னராக குருணல் பாண்டியாவை ஆடவைக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!