அறிமுக வீரராக களம் கண்ட ஜோ ரூட் இன்று கேப்டன்; விடாமுயற்சியின் விசுவரூப வெற்றி...

 
Published : Feb 14, 2017, 11:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
அறிமுக வீரராக களம் கண்ட ஜோ ரூட் இன்று கேப்டன்; விடாமுயற்சியின் விசுவரூப வெற்றி...

சுருக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக களம் கண்ட ஜோ ரூட் இன்று கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த அலாஸ்டர் குக், தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து துணை கேப்டனாக இருந்த ஜோ ரூட் இப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குக் கேப்டன்ஷிப்பின் கீழ் அறிமுக வீரராக களம் கண்ட ஜோ ரூட், இப்போது இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

இது தொடர்பாக ஜோ ரூட் வெளியிட்டுள்ள அறிக்கை:

“இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி எனக்கு வழங்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும்.

எங்கள் அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களை வழிநடத்திச் செல்வதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் கூறியது,

"எங்கள் அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு ஜோ ரூட் சரியான நபர். அவர், கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டது எனக்கு த்ரில்லாக இருக்கிறது' என்றார்.

இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 11 சதம், 27 அரை சதங்களுடன் 4 ஆயிரத்து 594 ஒட்டங்கள் குவித்துள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?