
ஐதராபாத் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் அதிவேகமாக 250 விக்கெட்டுகளை (45 டெஸ்ட்) வீழ்த்தியவர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டி முடிந்து இந்தியா வெற்றியைத் தொடர்ந்து, வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிமிடம் சென்றார் அஸ்வின்.
போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தில் முஷ்பிகுர் ரஹிமின் ஆட்டோகிராபை வாங்கினார் அஸ்வின். இதனைக் கண்டு மற்ற வீரர்கள் ஆச்சரியத்தில் திகைத்தனர்.
இதுகுறித்து ரஹிம் கூறுகையில், "இந்த டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்துடன் என்னை சந்தித்த அஸ்வின், அதில் ஆட்டோகிராப் கேட்டார்.
நான் அவருடைய 250-ஆவது விக்கெட். என்னை வீழ்த்தியதன் மூலம் அவர் டென்னிஸ் லில்லியின் உலக சாதனையை முறியடித்துவிட்டதாக கேள்விப்பட்டேன்' என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.