
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட ஆறு பேர், ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வுப் போட்டிகள் டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றன.
இதில் சுஷில் குமார் 74 கிலோ பிரிவு, ராகுல் அவாரே 57 கிலோ, பஜ்ரங் 65 கிலோ பிரிவு, சோம்வீர் 86 கிலோ பிரிவு, மெளசம் கத்ரி 97 கிலோ பிரிவு, சுமித் 125 கிலோ பிரிவு ஆகியோர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் போட்டியிட தகுதிபெற்றுள்ளனர்.
இந்த ஆறு பேரும் அடுத்தாண்டு கைர்ஜிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்து கொள்கின்றனர்.
இவர்களோடு மேலும் பத்து வீரர்கள் அந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கிரேக்கோ ரோமன் பிரிவில் போட்டியிட தகுதிபெற்றுள்ளனர்.
அவர்கள், ராஜேந்தர் 55 கிலோ பிரிவு, ஞானேந்தர் 60 கிலோ பிரிவு, விக்ரம் குராதே 63 கிலோ பிரிவு, மணீஷ் 67 கிலோ பிரிவு, குல்தீப் மாலிக் 72 கிலோ பிரிவு, குர்பிரீத் சிங் 77 கிலோ பிரிவு, ஹர்பிரீத் சிங் 82 கிலோ பிரிவு, சுனில் 87 கிலோ பிரிவு, ஹர்தீப் 97 கிலோ பிரிவு, நவீன் 130 கிலோ பிரிவு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.