முதல் நாளில் முதல் வெற்றியை பிடித்தது தெற்கு ரயில்வே, இந்தியன் வங்கி…

 
Published : Feb 28, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
முதல் நாளில் முதல் வெற்றியை பிடித்தது தெற்கு ரயில்வே, இந்தியன் வங்கி…

சுருக்கம்

first match won by south railways and indian bank teams

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியின் முதல் நாளில் முதல் வெற்றியை தெற்கு ரயில்வே மற்றும் இந்தியன் வங்கி அணிகள் பெற்றன.

செயின்ட் ஜோசப் - சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது.

இந்தப் போட்டியை செயின்ட் ஜோசப் கல்வி குழும தலைவர் பாபு மனோகரன் தொடங்கி வைத்தார்.

சீனியர் டிவிஷன் போட்டியில் கணக்கு தணிக்கை அலுவலக மனமகிழ்மன்ற கிளப் (ஏஜி), சென்னை சிட்டி, சென்னை சுங்கத் துறை, சென்னை எப்.சி., சென்னை யுனைடெட் எப்.சி., ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ், வருமான வரித்துறை, இந்தியன் வங்கி, மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன், தெற்கு ரயில்வே, வீவா சென்னை ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும். கடைசி இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சீனியர் டிவிஷனில் இருந்து முதல் டிவிஷனுக்கு தகுதியிறக்கம் செய்யப்படும். சீனியர் டிவிஷனில் மொத்தம் 66 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆட்டநாயகன் விருது பெறும் வீரர்களுக்கு தலா ரூ. 1,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். சீனியர் டிவிஷன் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 லட்சமும், 2, 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

முதல் டிவிஷன், 2-ஆவது டிவிஷன், 3-ஆவது டிவிஷன், 4-ஆவது டிவிஷன்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், அடுத்த இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

இதில் முதல் ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணியும், சென்னை யுனைடெட் எப்.சி. அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. எனினும் ரயில்வே அணிக்கு 38-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் ஸ்வராஜ் கோலடித்தார். இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் தெற்கு ரயில்வே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இரண்டாவது ஆட்டத்தில் இந்தியன் வங்கி தரப்பில் லாலன் சங்கா (49-ஆவது நிமிடம்), அபியூதுன் ஜோசப் (59-ஆவது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்ததால் இந்தியன் வங்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியைத் தோற்கடித்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!