ஐந்தாவது முறையாக சர்வதேச தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்தார் திர்ச்சி வீராங்கனை…

Asianet News Tamil  
Published : Jun 08, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
ஐந்தாவது முறையாக சர்வதேச தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்தார் திர்ச்சி வீராங்கனை…

சுருக்கம்

The fifth time the gold medal was won by Indias gold medal ...

சர்வதேச அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்று ஐந்தாவது முறையாக சர்வதேச அளவில் தங்கம் வென்றார் என்ற பெருமையைப் பெற்றார் திருச்சி வீராங்கனை ஜெனித்தா ஆண்டோ சாத்துள்ளார்.

சுலோவாகியா நாட்டில் உள்ள ருசம்பர்க் நகரில், சர்வதேச அளவிலான 17-ஆவது மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டிகள் மே 28 முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தியா சார்பில் தமிழக வீராங்கனையான, திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த கே.ஜெனித்தா ஆண்டோ உள்ளிட்ட நால்வர் கலந்து கொண்டனர்.

மொத்தம் ஒன்பதுச் சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டியில் ஜெனித்தா தங்கம் வென்று சர்வதேச அளவில் 5-வது முறையாக தங்கம் வென்றார் என்ற பெருமையப் பெற்றார்.

இந்த நிலையில், நேற்று தாயகம் திரும்பிய ஜெனித்தா ஆண்டோவுக்கு திருச்சி விமான நிலையத்தில், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு, சதுரங்க சங்கம், மாவட்ட விளையாட்டு ஊக்குவிப்போர் சங்கம் உள்ளிட்டவை சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெற்றிக் குறித்து ஜெனித்தா கூறியது, "தொடர்ந்து 5-வது முறையாக சர்வதேச அளவில் தங்கம் வென்றுள்ளதால், அர்ஜுனா விருதுக்கு இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது' என்றுத் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!