கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் நெதர்லாந்து வீரர் ராபன்…

Asianet News Tamil  
Published : Oct 12, 2017, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் நெதர்லாந்து வீரர் ராபன்…

சுருக்கம்

The Dutch football player Roban has retired from football match ...

சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து நெதர்லாந்து கால்பந்து வீரர் ஆர்ஜென் ராபன் ஓய்வு பெற்றார்.

அடுத்த வருடம் 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை.

இந்த நிலையில் ஆர்ஜென் ராபன் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நெதர்லாந்து அணிக்காக 96 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபன், 37 கோல்களை அடித்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் 2010 உலகக் கோப்பை போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய நெதர்லாந்து அணி, அதில் 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.

2014 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணி அரையிறுதி வரை முன்னேறுவதற்கு உதவினார் ராபன். 

ராபன் 14 ஆண்டுகள் நெதர்லாந்து அணிக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் பாண்ட்யாவை கழட்டி விடும் மும்பை இந்தியன்ஸ்.. மீண்டும் கேப்டனாகும் ரோகித் சர்மா?.. புது தகவல்!
ஐபிஎல் 2026 | சிங்க நடை போடும் விராட்.! சரித்திரம் படைத்த கோலி.! புதிய வரலாறு படைத்த ஆர்சிபி நாயகன்!